Sunday, May 2, 2010

ஜோடி | வெள்ளி மலரே

Posted by Anonymous on 4:38 PM 0 comments


படம் : ஜோடி
பாடல் : வெள்ளி மலரே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், மஹாலட்சுமி ஐயர்


வெள்ளி மலரே வெள்ளி மலரே...வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஓ...
வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ...
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெக்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

(வெள்ளி மலரே)
(இளந்தளிரே)

ஏ...
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெளி மலரே

(நேற்றுவரை)
(இளந்தளிரே)

வெள்ளி மலரே வெளி மலரே...


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails