Friday, December 24, 2010

About - Cute Videos

Posted by Anonymous on 10:19 AM 0 comments

CUTE VIDEOS உங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த தளத்தின் நோக்கம் இணையத்தில் ஆங்காங்கு காணும் நல்ல படைப்புகள், திரைப்பட வீடீயோக்கள் மற்றும் சுவையான, பயனுள்ள பல வீடியோக்களை ஒரு இடத்தில் தொகுத்து, வகைப்படுத்தி வைக்கும் முயற்சியே. 

நாங்கள் காப்புரிமை அனுமதியளிக்கப்பட்ட YOUTUBE.COM மற்றும் அதைப் தளத்திலிருந்தே பெரும்பாலான வீடியோக்களை இங்கு இணைத்திருக்கிறோம். எனினும் அவ்வப்போது வீடீயோக்கள் காப்புரிமை காரணமாகவும், வீடியோ உரிமையாளரின் விருப்பத்தின் பேரிலும் அத்தளங்களிலிருந்தே நீக்கப்படுகின்றன. முடிந்தவரை அவற்றை புதுப்பிக்க முயலுகிறோம்.

வீடீயோக்கள் வகைப்படுத்தப்பட்ட விதம்:

தமிழ் குறிச்சொற்கள் (labels in Tamil) மூலம் நீங்கள் அவற்றிற்குண்டான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியில் இருக்கும் அனைத்து வீடீயோக்களையும் பார்க்க முடியும். ஒரு பதிவில் உள்ள வீடியோ தமிழில் உள்ளதா, ஆங்கிலத்தில் உள்ளதா என்பதை அந்தப் பதிவின் தலைப்பை (Post Title) வைத்து தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் நாங்கள் தமிழ் வீடியோக்கள் உள்ள பதிவுக்கு தமிழில் தலைப்பும், ஆங்கில வீடீயோக்கள் உள்ள பதிவுக்கு ஆங்கிலத்தில் தலைப்பும் தந்துள்ளோம்.

ஆங்கிலக் குறிச்சொற்கள் (labels in English) மூலம் நீங்கள் அவற்றிற்குண்டான ஆங்கில வீடியோக்களை மட்டும் தான் பார்க்க முடியும். தமிழ் வீடியோக்களுக்கு நாங்கள் ஆங்கில குறிச்சொல் (English label) இடவில்லை.

வலைதளத்தின் தலைப்புக்கு அருகே இருக்கும் மேல் சட்டத்தில் மாட்டப்பட்ட படங்கள்  என்ற தலைப்பின் கீழ் தொங்கிக் கொண்டிருக்கும்  சினிமாப்படம்  வரிசையில் நெரிசலைத் தவிர்ப்பதற்காக மேலதிக தலைப்புகளை நாங்கள் திணிக்கவில்லை. 1.இசையமைப்பாளர்கள், 2.பாடகர்கள், 3.படங்கள், 4.திரைப்பட இயக்குனர்கள், 5.நடிகர்கள்/நடிகைகள் ஆகிய தலைப்புகள் வலது பக்கம் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உங்களின் மேலான கருத்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்.

நட்புடன்,
பிரபு
நல்லதம்பி

Creative Commons License
CUTE VIDEOS by gans, sasi, gokul, prabhu, nallan is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at youtube.com.


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails