Tuesday, July 19, 2011

ஆட்டோ ராஜா | சங்கத்தில் பாடாத கவிதை (பாடல்)

Posted by சிவாஜி on 10:52 AM 0 comments





படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையென்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails