Saturday, September 10, 2011

ஊமை குயில் (1983) | என் ராசாத்தி நீ வாழணும் அதை எந்நாளும் நான் பாக்கணும் (பாடல்)

Posted by சிவாஜி on 3:30 PM 0 comments



ஆண்:
என் ராசாத்தி நீ வாழணும்
அத எந்நாளும் நான் பாக்கணும்
மகராசி போல் நீ வாழணும்
உன் வாழ்வது தேனாகணும்

பெண்:
என்னோடு நீ சேரணும்
உன்னோடு நான் வாழணும்
பூமாலை நீ சூடணும்
தினம் பாமாலை தான் நான் பாடணும்

ஆண்:
என் ராசாத்தி நீ வாழணும்
அத எந்நாளும் நான் பாக்கணும்
....
பாதையை நீ மாத்திவிடு
உன் பயணத்த நீ தொடர்ந்துவிடு

பெண்:
போகும் வழி தெரியவில்ல
போகும் இடம் அது புரியவில்ல
....
என்னோடு நீ சேரணும்
உன்னோடு நான் வாழணும்

ஆண்:
பார்வையில தெளிவிருந்தா
பாதையின அறிஞ்சுடலாம்
நேர்மையெனும் வழி நடந்தா
சேரும் இடம் அத புரிஞ்சுடலாம்

பெண்:
கண் விழிக்கும் வேளையில
உன் விழியைத் தேடுகிறேன்
உன் நினைவின் இனிமையிலே
நாள் தோறும் வாழுகிறேன்

ஆண்:
என் ராசாத்தி நீ வாழணும்
அத எந்நாளும் நான் பாக்கணும்
....
பெண்:
அவ பிரிவ நீ மறந்திடணும்
என்னை நீ மணந்திடனும்
காலம் உண்டென்று வாழ்ந்திடனும்
என் ஆசை அது நிறைவேறனும்

ஆண்:
உன் ஆசையில தப்புமில்ல
உன்னோடு நான் சேர வழியுமில்ல
மனச நீ மாத்திக்கணும்
என்ன நீ மறந்திடணும்
.....
என் ராசாத்தி நீ வாழணும்
அத எந்நாளும் நான் பாக்கணும்


மகராசி போல் நீ வாழணும்
உன் வாழ்வது தேனாகணும்


பெண்:
என்னோடு நீ சேரணும்
உன்னோடு நான் வாழணும்
பூமாலை நீ சூடணும்
தினம் பாமாலை தான் நான் பாடணும்
......
என் ராசாத்தி நீ வாழணும்
அத எந்நாளும் நான் பாக்கணும்
.....




Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails