Wednesday, April 21, 2010

கருத்தம்மா | தென்மேற்கு பருவகாற்று

Posted by Anonymous on 10:37 PM 0 comments




ஆ:
தென்மேற்குப் பருவக்காற்று,
தேனிப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்!
தெம்மாங்கு பாடிக்கொன்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்!
பெ:
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டு விட,
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க....
(தென்மேற்கு)
ஆ:
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்,
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்!
பெ:
தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்,
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்!
ஆ:
மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ?
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே!
பெ:
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ?
நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே....!
(தென்மேற்கு )
பெ:
நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
நாமென்ற ஒரு வார்த்தை உண்டானதே!
ஆ:
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
ஆளென்ற ஒரு வார்த்தை உண்டானதே!
பெ:
காதலென்ற மந்திரத்தின் மாயம் என்ன?
கள்ளும் முள்ளும் இப்போது பூவானதே!
ஆ:
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து,
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....!
(தென்மேற்கு)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails