Tuesday, October 11, 2011

கொக்கரக்கோ | கீதம் சங்கீதம்

Posted by சிவாஜி on 8:42 PM 1 comments




கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (2)
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

(கீதம்)

வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம்
ஆஅ...

(கீதம்)

நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே
உன் கண்ணில் நீலங்கள் நான் இன்று கண்டேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது வந்தேன்
காணாத கோலங்கள் என்பேன்
ஆஅ...

(கீதம்)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails